சிறுவனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைக்க முயன்ற வாலிபர்கள் கைது


Caston| Last Modified புதன், 10 ஆகஸ்ட் 2016 (13:03 IST)
டெல்லியில் 12 வயது சிறுவன் ஒருவனை மூன்று வாலிபர்கள் தாக்கி, அவனது அந்தரங்க உறுப்பில் சூடு வைக்க முயன்றுள்ளனர். அவர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 
 
அந்த சிறுவன் தனது வீட்டின் அருகில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது அந்த பட்டம் வேறொரு வீட்டின் மேற்கூரையில் விழுந்துவிட்டது. இதனால் அந்த பட்டத்தை எடுக்க அந்த வீட்டிற்கு அந்த சிறுவன் சென்றுள்ளான்.
 
அப்போது அங்கிருந்த மூன்று வாலிபர்கள் அந்த சிறுவனை இரும்பு கம்பியால் தாக்கி, கத்தியை நெருப்பில் வைத்து சிறுவனின் கையில் சூடு வைத்துள்ளனர். மேலும் சிறுவனின் அந்தரங்க உறுப்பிலும் சூடு வைக்க  முயன்றுள்ளனர்.
 
பல மணி நேர துன்புறுத்தலுக்கு பின்னர் அந்த சிறுவனை இங்கு நடந்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என கூறி மிரட்டி அனுப்பியுள்ளனர். தங்கள் மகன் தாக்கப்பட்டதை அறிந்த சிறுவனின் பெற்றோர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். பின்னர் அந்த மூவரும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :