வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 4 நவம்பர் 2015 (19:13 IST)

மாட்டு கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்ட 24 சிறுவர்கள் மீட்பு

சிறுவர்கள் பராமரிப்பு நிலையம் என்று கூறி மாட்டு கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 24 சிறுவர்களை காவல்துறையினர் மீட்டனர்.
 

 
ஒடிசா மாநிலம் கெனான்கர் மாவட்டத்தில் உள்ள பிரமணிப்பால் என்ற இடத்தில் ஏழை சிறுவர்களுக்கு பராமரிப்பு நிலையம் ஒன்று செயல்பட்டு வந்தது.
 
இங்கு சிறுவர்கள் மாட்டுக் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட சிறுவர்கள் பராமரிப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
உடனே மாவட்ட சிறுவர்கள் பராமரிப்பு அதிகாரி இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். வட்டாட்சியர் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் மாட்டு கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 24 சிறுவர்கள் உள்பட 30 பேரை மீட்டனர்.
 
பின்னர் அவர்கள் கெனான்கர் நகரில் சிறுவர்கள் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
இது பற்றி கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் எஸ்.கே. சுவின் கூறும்போது, ’மாவட்ட சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்து அறிக்கை வந்த பிறகு, அந்த பராமரிப்பு நிலையம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.