1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. 2 Months After Marriage, Delhi Woman Found Dead; Family Alleges Dowry Murder

நண்பர்களுக்கு திருமண பார்ட்டி வைத்த மணப்பெண் சில மணி நேரங்களில் மர்ம மரணம்.. கணவர் வீட்டார் காரணமா?

டெல்லி மரணம்
டெல்லியில் 28 வயதான ஆக்ரிதி சுதார் என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஏப்ரல் 24-ம் தேதிதான் ஆக்ரிதிக்கும், அராஸ்து சிக்கா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. சுமார் 8 வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், வேலையில்லாமல் இருக்கும் அராஸ்து மற்றும் அவரது குடும்பத்தினர் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு ஆக்ரிதியை தொடர்ந்து கொடுமைப்படுத்தி மிரட்டி வந்ததாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
சனிக்கிழமை அன்று விடுப்பு முடிந்து ஆக்ரிதி மீண்டும் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு தனது திருமணத்திற்காக சக ஊழியர்களுக்கு மகிழ்ச்சியாக ஒரு பார்ட்டியும் கொடுத்துள்ளார். மாலை 6 மணியளவில் தனது தாயிடம் தொலைபேசியில் மிக இயல்பாக பேசிய அவர், தான் வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
 
ஆனால், இரவு 8 மணிக்கு ஆக்ரிதியை காணவில்லை என அவரது கணவர் அராஸ்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த 90 நிமிடங்களில், அவர்களது வீட்டில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோதி காலனி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து ஆக்ரிதி சடலமாகக் கிடந்ததை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
 
மனதளவில் மிகவும் தைரியமான ஆக்ரிதி தற்கொலை செய்துகொள்ள எவ்வித வாய்ப்பும் இல்லை என்றும், இது முழுக்க முழுக்க வரதட்சணைக்காகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்றும் ஆக்ரிதியின் குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதரர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கணவன், மனைவிக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் அனைத்துக் கோணங்களிலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
உபியில் 2027ல் மீண்டும் பாஜக ஆட்சி.. 2047ல் இந்தியா வல்லரசு.. பாஜக தேசிய தலைவர் நிதி நிபின் முழக்கம்...