ஐதராபாத், உன்னாவ் தொடர்ந்து மீண்டும் ஒரு பெண் எரித்து கொலை:

Last Modified ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (15:09 IST)
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர், உன்னாவ் இளம்பெண் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்தும் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்

இந்த நிலையில் ஐதராபாத், உன்னாவ் அடுத்து திரிபுராவில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது

திருபுராவை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் சமூக வலைதளம் மூலம் அஜோய் என்பவருடன் நட்புக்கு உள்ளானார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் அஜோய்யின் ஆசை வார்த்தைகளை நம்பி சாந்தி பஜார் என்ற பகுதியில் அவருடன் ஒரு வீட்டில் அந்த சிறுமி தங்கியுள்ளார்

அந்த வீட்டில் சிறுமியை அஜோய்யும் அவருடைய நண்பர்களும் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அந்த சிறுமி மிகவும் உடல் நலமின்றி இருந்ததால் அவரை உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ளனர் இதனையடுத்து அந்த சிறுமி சிகிச்சையின் அந்த சிறுமி பரிதாபமாக பலியாகியுள்ளார்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளி அஜோய்யை கைது செய்து அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர்களை தேடி வருகின்றனர். 17 வயது சிறுமி ஒருவர் இரண்டு மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திரிபுரா மாநிலத்தை மட்டுமின்றி இந்தியாவிலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :