1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 19 ஜனவரி 2015 (16:53 IST)

130 பேர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாற்றம்

கேரளாவில் 130 பேர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
விஸ்வ இந்து பரிஷத் இந்து மதத்தில் இருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட இடங்களில் பிற மதத்தில் இருந்து ஏராளமானோர் இந்து மதத்திற்கு  மாற்றப்பட்டனர்.
 
இந்நிலையில் நேற்று மேலும் 130 பேர் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர். இடுக்கி மாவட்டம் ஏலப்பாறையில் நேற்று 37 குடும்பத்தை சேர்ந்த 103 பேர்  இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர். இங்குள்ள கீழேபெருந்தரை தேவிகோயிலில் வைத்து மதம் மாற்றும் சடங்குகள் நடந்தது. கடந்த சில வருடம் முன் இந்து மதத்தில்  இருந்து பெந்தகோஸ்தே பிரிவுக்கு மாறிய 103 பேர் மதம் மாற்றப்பட்டனர். 
 
கோயில் மேல்சாந்தி ஜெயதேவன் நம்பூதிரி மற்றும் ஆரிய சமாஜத்தை சேர்ந்த சிவராமன், விஎச்பி இடுக்கி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர்  கலந்துகொண்டனர். பெந்தகோஸ்தே அமைப்பை சேர்ந்த இவர்கள் தாங்களாகவே முன் வந்து இந்து மதத்தில் சேர்ந்துள்ளதாக ராஜேந்திரன் கூறினார்.
 
இதுபோல் காயங்குளத்தில் 27 பேர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர். இங்குள்ள புதுப்பள்ளி கோயிலில் வைத்து இந்த மதமாற்ற சடங்குகள் நடந்தன. இந்த நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஆலப்புழா மாவட்ட தலைவர் பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.