பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 13 ரஷ்ய சுற்றுலா பயணிகள் பலி

பேருந்து,ரஷ்ய சுற்றுலா பயணிகள்,பலி , உத்தரகாண்ட்
Geetha Priya| Last Updated: செவ்வாய், 10 ஜூன் 2014 (18:55 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில் 13 ரஷ்ய சுற்றுலா பயணிகளை கங்கோத்ரிக்கு அழைத்து சென்ற பேருந்து பாகிரதி ஆற்றில் கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த 13 ரஷ்ய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாயினர்.
இன்று பிற்பகல் நடந்த இந்த துயர சம்பவத்தில், கங்கோத்ரி நோக்கி சென்ற பேருந்தில் 13 ரஷ்ய சுற்றுலா பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஹர்ஷில் பகுதியில் இருந்து 2 கீ.மி தூரத்தில் பேருந்து
பாகிரதி ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. இவ்விபத்தால் பேருந்தில் இருந்த 13 ரஷ்ய சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாயினர்

இமாச்சல
பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 24 பேர் பியஸ் அற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :