1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2016 (08:50 IST)

மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டில் மட்டும் 1,000 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிராவில் 1,000 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிர மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


 

 
விவசாயிகள் தற்கொலை குறித்து மும்பை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
 
இது குறித்து, விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மகாராஷ்டிர மாநில அரசு பதில் அளித்துள்ளது. அந்த பதிலில் 2015 ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தது.
 
இந்நிலையில், விவசாயிகள் தற்கொலை பிரச்னையை தீர்க்க, கூட்டு விவசாய முறை உள்ளிட்ட புதிய யுக்திகளை கடைபிடிக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
மேலும், இது தவிர பெருவணிக நிறுவனங்களை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கிராமங்களை தத்தெடுக்க வைக்கலாம் என்றும், விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்டவற்றை இலவசமாக கொடுக்க அவர்களை அறிவுறுத்தலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஒரு மாநிலத்தில் 1 ஆண்டில் மட்டும ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், இந்த பொருளாதாரத்தன் மீது மிகப்பெரிய கேள்வியையும் எழுப்பியுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.