எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 10வது நாளாக முடங்கிப்போனது.
நாடாளுமன்றம் இன்று காலை துவங்கியதும் பா. ஜ.க. உள்பட எதிர்க்கட்சிகள், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்புக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை 12 மணிவரை தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இரு அவைகளும் கூடியதும் எதிர்கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். அவை தலைவர் இந்த செயல்கள் பதிப்பில் பதிவு செய்யப்படாது என குறிப்பிட்டார் இதனால் மாநிலங்களவையின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டதால் 10வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பதாக அவை தலைவர்கள் அறிவித்தனர்.