புயலால் 72 பேர் பலி…1 லட்சம் கோடி சேதம் – முதல்வர் மம்தா

mamata banerjee
sinoj| Last Updated: வியாழன், 21 மே 2020 (17:07 IST)
 

வங்கக்கடலில் உருவாகிய அம்பான் புயல் நேற்று மதியம் மேற்கு வங்க மாநிலத்திற்கும் மற்றும் வங்கதேச நாட்டிற்கும் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 முதல் 180 கிலோ மீட்டர் வரை காற்று வீசியதால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன.

கொல்கத்தாவில் வீசிய பலத்த புயல் காற்றால் கொல்கத்தா விமன நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் பல சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் விமான தளம் முழுவதும் நீர் தேங்கியுள்ளதால் விமானநிலையமே பெரிய ஏரி போன்று காட்சியளிக்கிறது. விமான கூடாரங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளும் சேதமடைந்துள்ளன..

இந்நிலையில், அம்பான் புயலால் மேற்கு வங்கத்தில்  இதுவரை 72 பேர் பலியாகி உள்ளதாகவும் , கொல்கத்தாவில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  தலா ரூ.2.5  லட்சம் நிவாரண உதவி வழங்குவதாகவும் புயலால் அம்மாநிலத்தில்  1 லட்சம் கோடி சேதம் அடைந்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :