பாஜக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் பிடிக்க ஆம் ஆத்மி கட்சியினர் கேமராக்களுடன் சுற்றுகின்றனர்

Ilavarasan| Last Updated: ஞாயிறு, 11 மே 2014 (21:08 IST)
வாரணாசியில் நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கு, மக்களிடம் பாஜக பணம் கொடுப்பதை ஆதாரத்துடன் பிடிக்க ஆம் ஆத்மி கட்சியினர் கேமராக்களுடன் சுற்றுகின்றனர்.
வாரணாசி தொகுதியில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெர்ஜிவால் ஆகியோர் மோதுவதால் இந்த தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வாரணாசி தொகுதியில் மோடியை வெற்றி பெற வைக்க பாஜ கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். அதே போல், ஆம் ஆத்மி கட்சியினரும் பிரசாரம் செய்தனர்.

வாரணாசி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஜெயிக்கும் நடவடிக்கையில் பா.ஜனதா கட்சியினர் ஈடுபடலாம் என்று ஆம் ஆத்மி கட்சியினர் கருதுகிறார்கள். பணம் கொடுப்பதை தடுக்க ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 250 தொண்டர்கள் ரகசிய கண்காணிப்பு கேமராவுடன் தொகுதி முழுக்க உலா வருகின்றனர். முறைகேடு நடவடிக்கைகளில் பாஜ கட்சியினர் ஈடுபட்டால் அவர்களை ஆதாரத்துடன் சிக்க வைக்க ஆம் ஆத்மி கட்சியினர் இந்த திட்டத்தை வகுத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :