தென் மேற்கு பருவமழை தீவிரம் : ஆந்திராவில் பலத்த மழை!

Webdunia| Last Modified வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (19:45 IST)
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகளிலும், தெலுங்கானாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்துள்ளது!

ஆந்திராவின் வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து நிலப்பரப்பிற்கு மேல் வந்ததையடுத்து, ஆந்திராவின் வடக்கு கடலோரப் பகுதிகளிலும், தெலுங்கானாவில் நல்ல மழையும், ராயலசீமாவில் விட்டு விட்டும் மழை பெய்து வருகிறது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தெலுங்கானாவில் பலத்த மழையும், ஆந்திராவின் கரையோரப் பகுதிகளில் விட்டு விட்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரீம்நகர் மாவட்டத்தின் நிசாமாபாத், சுல்தான்பாத் பகுதிகளில் அதிகபட்சமாக 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளா, கர்நாடகா, லட்சத்தீவுகளிலும், தமிழ்நாட்டிலும் விட்டுவிட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :