அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

Webdunia| Last Modified ஞாயிறு, 1 ஜனவரி 2012 (16:33 IST)
உடல்நல‌க் குறைவு காரணமாக அன்னா ஹாசாரே புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அன்னா ஹசாரேவின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதிலும், அவர் சுமார் 5 நாட்களாவது ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் மும்பையில் நடந்த 3 நாள் உண்ணாவிரதப் போராட்டம், அன்னா ஹசாரேவின் உடல்நலக் குறைவு காரணமாக 2வது நாளே முடித்துக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திங்கள், செவ்வாய் நடக்கயிருந்த அன்னா ஹசாரே போராட்டக் குழுவின் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :