புயல் பாதிப்பு : ரூ.2,000 நிவாரணம் - புதுவை முதல்வர்

Webdunia| Last Modified ஞாயிறு, 1 ஜனவரி 2012 (11:48 IST)
தானே புயலால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகி, உருக்குலைந்துள்ள புதுச்சேரியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரங்கசாமி, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும். ரூ.2,000 வழங்கப்படும் என்றும், மீனவர் சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1,800 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :