ஹைதராபாத் மருத்துவமனையில் தீ: 43 பேர் காயம்

ஹைதராபாத்| Webdunia|
ஆந்திரா தலைநகர் ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தின் சோமஜ்குடா பகுதியில் உள்ள பார்க் சூப்பர் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மட்டும் 8 நோயாளிகளை உயிருடன் மீட்டதாகக் கூறினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்கள் என 30 பேர் தீக்காயம் அடைந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் நிம்ஸ் மற்றும் யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் இன்னும் பலர் உயிருக்குப் போராடி வருவதால் அவர்களை மீட்கும் பணி துரித கதியில் நடந்து வருவதாகத் தெரிவித்த காவல்துறையினர், காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :