பொற்கோவில்: யு.எஸ். தொலைக்காட்சியின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

வாஷிங்டன்/புதுடெல்லி | Webdunia|
பொற்கோவில் பற்றிய அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் வெளியான பிரபல நிகழ்ச்சியில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலின் படம் ஒளிபரப்பானது.

அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜே லினோ,பொற்கோவில் பற்றி தெரிவித்த கருத்துக்கு அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இது குறித்து அமெரிக்க அரசுடன் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் நிருபமா ராவுக்கு மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :