ஆந்திராவில் 29 வாக்குச்சாவடிகளுக்கு மறு தேர்தல்

Ilavarasan| Last Modified ஞாயிறு, 11 மே 2014 (15:40 IST)
ஆந்திர பிரதேசத்தில் 29 வாக்குச்சாவடிகளில் மே 13 ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி பகன்வார்லால் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் 11 வாக்குச்சாவடிகளிலும், சீமாந்திராவில் 18 வாக்குச்சாவடிகளிலும் ஏப். 30 மற்றும் மே 7 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வந்ததால் மறுதேர்தல் நடைபெறுகிறது.

29 வாக்குச்சாவடிகலும் 13 லோக்சபா மற்றும் 21 சட்டசபை தொகுதிகளில் உள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து மாவட்ட கலெக்டர்களுக்கு புகார் வந்ததால் தேர்தல் ஆணையம் மறுதேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபை மற்றும் 17 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 2 ஆவது கட்டமாக சீமாந்திராவில் உள்ள 175 சட்டசபை மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 7 ஆம் தேதி நடைபெற்றது.


இதில் மேலும் படிக்கவும் :