பிரதமருக்கு அன்னா ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி

Webdunia| Last Modified ஞாயிறு, 1 ஜனவரி 2012 (14:52 IST)
2012 புத்தாண்டு முன்னிட்டு பொற்கோயிலிற்குச் சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காண்பித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2012 ஆங்கிலப் புத்தாண்டு இன்று பிறப்பதை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங் தனது மனைவியுடன் பஞ்சாப் மாநிலம் அமிர்ஸ்டரில் உள்ள பொற்கோயிலிற்கு வழிபடச் சென்றார்.

இந்நிலையில், பிரதமர் வருகையை அறிந்த அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக் கொடி காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :