ம‌ணி‌ப்பூ‌ர், ப‌ஞ்சா‌‌பி‌ல் மறுவா‌‌க்கு‌ப் ப‌திவு - தே‌ர்த‌ல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌ப்பு

Webdunia|
மணிப்பூரில் வரு‌ம் 4ஆ‌ம் தேதியு‌ம், பஞ்சாபில் 2ஆ‌ம் தேதியு‌ம் மறுவாக்குப்பதிவு நடைபெ‌று‌ம் எ‌ன்று தேர்தல் ஆணையம் அறிவி‌‌த்து‌ள்ளது.

மணிப்பூரில் கட‌ந்த மாத‌ம் 28ஆ‌ம் தே‌தி நடைபெ‌ற்ற ச‌ட்ட‌ப்பேரவை பொது‌த் தே‌ர்த‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட வ‌ன்முறை‌யி‌ல் 5 பே‌ர் ப‌லியானா‌ர்க‌ள்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 11 சட்ட‌ப்பேரவை தொகுதிகளில் 34 வாக்குச்சாவடிகளுக்கு வரு‌ம் 4ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தே‌ர்த‌ல் ஆணைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
அதேபோல் பஞ்சாபில் ஒரு வாக்கு சாவடியில் 2ஆம் தேதி மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :