ஹசாரே உண்ணாவிரதத்துக்கு தடை விதிக்க கோ‌ரி வழ‌க்கு

Webdunia| Last Modified செவ்வாய், 2 ஆகஸ்ட் 2011 (08:52 IST)
அ‌ண்ணா ஹசாரே உ‌ண்ணா‌விரத‌த்‌து‌க்கு தடை ‌வி‌‌தி‌க்க கோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பொதுநல‌ன் வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், வர்த்தகருமான ஹேமந்த் ாட்டீல் எ‌ன்பவ‌ர் இ‌‌ந்த வழ‌க்கை தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர்.

அ‌ண்ணா ஹசாரேயின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு மிரட்டல் விடும் வகையில் உள்ளது எ‌ன்று‌ம் அவரது கோரிக்கை நியாயமற்றது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது எ‌ன்று‌‌ம் மனு‌வி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
அமை‌ச்சரவை ஒப்புதல் அளித்த மசோதாவுக்கு அ‌ண்ணா ஹசாரே எதிர்ப்பு தெரிவிப்பது அமை‌ச்சரவை நடவடிக்கைகளில் தலையிடுவது எ‌ன்று கூ‌றியு‌ள்ள ஹேம‌ந்‌த் பா‌ட்டீ‌ல், நீதிபதிகளை விசாரணை வரம்புக்குள் கொண்டு வர கோருவது, நீதித்துறையின் சுதந்திரத்தில், சட்டத்தின் பாதுகாவலர்களின் உரிமையில், நீதித்துறையின் ஒருமைப்பாட்டில் தலையிடுவது ஆகும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.
ஆகவே, அவரது உண்ணாவிரதத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு‌வி‌ல் ஹேம‌ந்‌த் பா‌ட்டீ‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.


இதில் மேலும் படிக்கவும் :