லோக்பாலில் பிரதமரைச் சேர்க்க 85 % மக்கள் விருப்பம்: அண்ணா ஹசாரே

புதுடெல்லி | Webdunia| Last Modified திங்கள், 1 ஆகஸ்ட் 2011 (17:44 IST)
லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க 85 விழுக்காட்டினர் ஆதரிப்பதாக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனைக் கூறிய அண்ணா ஹசாரே குழுவினர், லோக்பால் வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கும் எங்கள் லோக்பால் மசோதாவையே பெரும்பான்மை மக்கள் ஆதரிப்பதாக கூறினர்.

அமைச்சர் கபில் சிபல் தலைமையில் தயாரித்திருக்கும் லோக்பால் மசோதாவை நாங்கள் வைத்திருக்கிறோம். ஆனால், 85 விழுக்காடு மக்கள் நாங்கள் பரிந்துரைத்த லோக்பால் மசோதாவை ஆதரிக்கிறார்கள்.
கபில் சிபல், அரசாங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா வரைவுக் கமிட்டியின் 5 நபர் குழுவில் ஒருவராக இருக்கிறார்.

அரசு எங்கள் தரப்பு பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை.நாங்கள் தயாரித்து வைத்திருக்கும் லோக்பால் வரைவினை உதாசீனப்படுத்தியது குறித்து கவலை அளிப்பதாக உள்ளது. பிரதமர் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று அவர்கள் மேலும் கூறினர்.
அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் லோக்பால் மசோதா,நாடாளுமன்றத்தில் நாளை தாக்கலாகும் என்று தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :