மன்மோகன் சிங் ராஜினாமா செய்யட்டும்: பா.ஜனதா காட்டம்!

புதுடெல்லி | Webdunia| Last Modified புதன், 22 டிசம்பர் 2010 (18:09 IST)
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை எதிர்கொள்ளட்டும் அல்லது ராஜினாமா செய்துவிட்டு போகட்டும் என்று பா.ஜனதா காட்டமாக கூறியுள்ளது.

டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று தே.ஜ.கூட்டணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊழலுக்கு எதிரான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பா.ஜனதா மூத்த தலைவர் அருண் ஜெட்லி, மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளான பி.ஜே. தாமஸை நியமித்தததற்காகவும் பிரதமரை அவர் கடுமையாக சாடினார்.
காங்கிரஸ் ஆட்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களும், அதிகார தரகர்களுமே அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளை எடுப்பதாக குற்றம் சாற்றிய அவர், நாடளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கவில்லை என்றால், ராசா தொலை தொடர்புதுறை அமைச்சராக நீடித்திருப்பார் என்று மேலும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :