மகள்களை ஆட்டோவுடன் எரித்து கொன்ற தந்தை

Webdunia|
FILE
குஜராத்தில் தனது இரண்டு மகள்களை ஆட்டோவுடன் ஒரு நபர் எரித்து கொன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கோவிந்த். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு மனைவியோடு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

தனது மகள்களை தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் கொண்டுவிடும் வழக்கமுடைய கோவிந்த், வழக்கம்போல் 2 மகள்களையும் பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார்.
மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபமாக இருந்த கோவிந்த் பள்ளிக்கு செல்லும் வழியில், மேகானிநகர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது திடீர் என்று ஆட்டோவை நிறுத்தி, 2 மகள்களுடன் ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.


இதில் மேலும் படிக்கவும் :