பெட்ரோல் விலை உயர்த்தப்படாது: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி| Webdunia|
பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயர்த்தப்பட மாட்டாது என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலை உயரும் என்பது ஊகத்தின் அடிப்படையில் பரப்பப்படும் வெறும் கற்பனை செய்தி. இதில் உண்மை ஏதுமில்லை.

தற்போது பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என்றார்.
முன்னதாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 107 டாலராக அதிகரித்திருப்பதால், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்ததும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்த்தப்படலாம் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :