பாலியல் துன்புறுத்தலே பீகார் பா.ஜ. எம்.எல்.ஏ. கொலைக்கு காரணம்?

பாட்னா | Webdunia| Last Modified செவ்வாய், 4 ஜனவரி 2011 (14:09 IST)
பீகாரில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வை குத்திக்க்கொன்ற பெண், ஒரு ஆசிரியை என்றும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாலேயே அவர் இந்த கொலையை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
பீகாரில் பா.ஜனதா ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ராஜ்கிஷோர் கேஷ்ரி, இன்று காலை தனது இல்லத்தில் பார்வையாளர்களை சந்தித்தபோது, ரூபம் பதாக் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பெண் ஒருவர், திடீரென அவரைக் கத்தியால் குத்தினார்.

இதில் படுகாயமடைந்த ரா‌‌ஜ்‌கிஷோ‌ர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்தார்.
ரா‌‌ஜ்‌கிஷோ‌ரை கத்தியால் குத்திக் கொன்ற பதாக் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பதாக் என்ற அந்த பெண் ஒரு பள்ளி ஆசிரியை என்றும், அவரை ராஜ்கிஷோர் மற்றும் அவரது கூட்டாளிகளும் மூன்றாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து அவரை துன்புறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பதாக் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்தி முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தம்மை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய ரா‌‌ஜ்‌கிஷோ‌ மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத ஆத்திரத்திலேயே, அவரை பழி வாங்குவதற்காக பதாக் கத்தியால் குத்திக்கொன்றதாக தெரிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :