தேர்தலை புறக்கணிக்க முதன்முறையாக எஸ்.எம்.எஸ் மூலம் அழைப்பு விடுக்கும் மாவோயிஸ்ட்கள்

Maoists
Last Modified திங்கள், 31 மார்ச் 2014 (15:30 IST)
ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவோயிஸ்ட் இயக்கம்,  முதன்முறையாக எஸ்.எம்.எஸ். மூலம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Maoists
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொதுத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்" என்ற வாசகம் அடங்கிய எஸ்.எம்.எஸ். தகவலை மொத்தமாக செல்போன் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த தகவல்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) எல்லை மண்டலக்குழு செய்தித் தொடர்பாளர் அவினாஷ் பெயரில் அனுப்பப்படுகின்றன.
 
இதுதவிர மக்கள் விடுதலை கொரில்லா படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உள்ள தனது தொண்டர்களுக்கும் இதுபோன்ற எஸ்.எம்.எஸ். தகவல்களை இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அனுப்பி வருகிறது.
 
அதில், தேர்தலின்போது பாதுகாப்பு படைகள் மீது தாக்குதல் நடத்தும்படி கூறப்பட்டுள்ளது என்றார். ஜமுய், லக்கிசராய், பங்கா, கயா, அவுரங்காபாத் மாவட்டங்களில் தேர்தலை புறக்கணிக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
 
பாதுகாப்பு படையினரை திரும்பப் பெற வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :