தெலங்கானா: தெ.தேசம் எம்.எல்.ஏக்கள் மிரட்டல்

ஹைதராபாத் | Webdunia| Last Modified வெள்ளி, 1 ஜூலை 2011 (18:40 IST)
தனித் தெலங்கானா உருவாக்கத்திற்காக தங்களது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெலங்கானா பகுதியை சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானாவுக்கான தெலுங்குதேசம் கட்சி அமைப்பின் தோற்றுவிப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான எர்ரப்பள்ளி தயாகர் ராவ், இந்த விடயம் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்வதற்காக நாளை ஹைதராபாத்தில் தமது கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறினார்.
தனித் தெலங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசை நிர்ப்பந்திப்பதற்காக தங்களது எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :