டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட அன்னா ஹசாரே குழு முடிவு

Webdunia|
ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே குழுவினர்களின் உறுப்பினர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அர்விந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் கோபால் ராய் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறும் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என்று அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

அதன்படி, டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபட குழுவின் உறுப்பினரான கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக அரசியலில் ஈடுபட ஹசாரேவை குழு உறுப்பினர்கள் தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டை கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :