டிஆர்எஸ் கட்சியிலிருந்து நடிகை விஜயசாந்தி சஸ்பெண்ட்

Webdunia|
FILE
ஆந்திர மாநிலம் மேடக் தொகுதி எம்பியான நடிகை விஜயசாந்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக வெளியான தகவலையடுத்து அவர் டிஆர்எஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். தனி தெலுங்கானாவுக்காக டிஆர்எஸ் கட்சித்தலைவர் சந்திரசேகர ராவுடன் சேர்ந்து டெல்லியிலும் பல போராட்டங்களில் ஈடுபட்டார். இந்நிலையில், விஜயசாந்தி கடந்த சில தினங்களாக டிஆர்எஸ் கட்சி சார்பில் நடந்த எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு தனி தெலுங்கானா குறித்து அறிவித்தபோது டிஆர்எஸ் கட்சி சார்பில் நடந்த வெற்றி விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இதுதவிர விஜயசாந்தி வீட்டின் அருகே முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரின் புகைப்படங்களுடன் ஏற்பாடு செய்த பிளக்ஸ் போர்டுகள், கட் அவுட்கள் கடந்த சில நாட்களாக காணப்படுகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி சேரப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக விஜயசாந்தியின் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் கூறுகையில், டிஆர்எஸ் கட்சியில் விஜயசாந்தி சேர்ந்தபோது கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சி சார்பிலும், தெலுங்கானா தனி மாநிலத்திற்கான நிகழ்ச்சிகளிலும் சந்திரசேகர ராவுடன் அவர் சேர்ந்து சென்றபோது அவரை மேடைக்கு அழைப்பதில்லை.


இதில் மேலும் படிக்கவும் :