செய்தியாளர்களை சந்திக்கும் பிரதமர்; பதவி விலகுகிறாரா?

Webdunia|
FILE
2014 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் ராகுல் காந்திக்கு வழிவிட்டு, வரும் மூன்றாம் தேதி பதவி விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், காங்கிரஸ் தரப்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், விரைவில் அதுகுறித்து அறிவிக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :