கேரளாவில் பெட்ரோல் விலை குறைப்பு

Webdunia| Last Modified வியாழன், 19 மே 2011 (09:19 IST)
பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்‌‌வி‌ன் காரணமாக கேரளா‌வி‌ல் பெ‌ட்ரோ‌லு‌க்கான ‌வி‌ற்பனை வ‌ரிசை அ‌ம்மா‌நில அரசு ர‌த்து செ‌‌ய்து‌ள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தியதால், கேரளாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.39 உயர்ந்தது.

இதன்மூலம், கேரள அரசுக்கு விற்பனை வரி மூலம் கூடுதலாக ஆண்டுக்கு ரூ.131 கோடியே 94 லட்சம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், முதலமை‌ச்ச‌ர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசின் முதலாவது அமை‌ச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அதில், கூடுதலாக கிடைக்கும் விற்பனை வரி வருவாயை ரத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.22 காசுகள் குறைந்தது.


இதில் மேலும் படிக்கவும் :