குடியரசுத் தலைவருடன் பிரதமர் திடீர் சந்திப்பு

புதுடெல்லி| Webdunia| Last Modified வெள்ளி, 1 ஜூலை 2011 (16:42 IST)
மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை,பிரதமர் மன்மோகன் சிங் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது இருவரும் எது குறித்து விவாதித்தார்கள் என்பதுபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றபோதிலும், விலைவாசி உயர்வு, உள்நாட்டுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்தும், விரைவில் தொடங்க உள்ள மழைக்கால கூட்டத் தொடர் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவரை பிரதமர் சந்தித்ததைத் தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :