காஷ்மீர்: இந்தியா-பாக். இருதரப்பு பிரச்சினை!

Webdunia| Last Modified ஞாயிறு, 9 நவம்பர் 2008 (03:21 IST)
காஷ்மீர் என்பது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான இருதரப்பு பிரச்சினை என்ரும், இதற்கு தீர்வு காண வேண்டியது இரு நாடுகளையும் சேர்ந்தது என்றும் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.

கொல்கட்டாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜியிடம், காஷ்மீருக்கான சிறப்புத் தூதராக முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை நியமிக்கலாம் என புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா விருப்பம் தெரிவித்திருப்பது பற்றிக் கேட்டதற்கு அவர் இவ்வாறு கூறினார்.

சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை அடிப்படையில் நடத்த்தப்பட்ட ஆலோசனையும் தீர்வுக்கு வழிவகுக்கும் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :