காங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல்: நடிகை நக்மா மீரட் தொகுதியில் போட்டி

FILE

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் முதல் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டது. நேற்று 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய பட்டியலில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலத்தில் தக்ஷிண கன்னடா தொகுதியில் ஜனார்தன பூஜாரியும், சிக்கபல்லபூர் தொகுதியில் மத்திய மந்திரி வீரப்ப மொய்லியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் வடகரா தொகுதியில் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், சாலக்குடியில் பி.சி.சாக்கோ, எர்ணாகுளத்தில் கே.வி.தாமஸ், திருவனந்தபுரத்தில் சசிதரூர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பல தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள நடிகை நக்மாவுக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர் உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்தி நடிகர் ராஜ்பப்பர் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

புதுச்சேரி தொகுதியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Webdunia|
காங்கிரஸ் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகை நக்மாவுக்கு மீரட் தொகுதியும், மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு புதுவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குரிய வேட்பாளர்கள் இந்த 2-வது பட்டியலிலும் அறிவிக்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :