கள்ளக்காதலால் தூங்கிகொண்டிருந்த சிறுவர்கள் தீயிட்டு கொலை

Webdunia|
FILE
கேரளாவில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த, சிறுவர்கள் இருவர், எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா வல்லகடவு பகுதியை சேர்ந்த பகவதி (17), சிவா (11) ஆகிய இரு சிறுவர்களும் வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது அவர்கள் தீயிட்டு எரித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சிறுவர்களின் தாய் மாரிமுத்து என்னும் நபருடன் தகாத உறவு கொண்டிருந்ததாக தெரிகிறது. கள்ளகாதலியின் மகன்களுக்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த மாரிமுத்து கடந்த 21 ஆம் தேதி வீட்டில் தனியாக தூங்கிகொண்டிருந்த சிறுவர்களை தீயிட்டு எரித்து கொன்றார்.
இச்சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொண்டுவந்த போலீசார், சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான, ஆதாரங்களை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து கொடூரமாக இரு சிறுவர்களை தீயிட்டு எரித்து கொன்ற மாரிமுத்துவை போலீசார் தேடிவருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :