கர்நாடக ஆளுனரை மாற்றக் கோரி பா.ஜனதா போராட்டம்

மும்பை| Webdunia|
கர்நாடக ஆளுனர் எச்.ஆர்.பரத்வாஜை மாற்றக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது.

கர்நாடக ஆளுனர் பரத்வாஜூக்கும், முதலமைச்சர் எடியூரப்பாவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில், அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பரத்வாஜ், தன்னிடம் ஊழல்வாதிகள் பட்டியல் இருப்பதாகவும், ஊழல்வாதிகளின் பட்டியலை எடியூரப்பாவுக்கும் அனுப்பியுள்ளதாகவும், ஊழல்வாதிகளின் பட்டியல் யாருக்காவது தேவைப்பட்டால் அவர்கள் ராஜ்பவன் வந்து பார்க்கலாம் என்றும் கூறினார்.
அவரது இந்த பேச்சு பா.ஜனதாவினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் பரத்வாஜின் நடவடிக்கை கர்நாடகத்தில் பா.ஜனதா அரசுக்கு தொடர்ந்து தீராத தலைவலியாகவும் இருந்து வருகிறது.

இதையடுத்து ஆளுனரை நீக்க கோரி போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :