கர்நாடகா உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ. அதிக இடங்களை கைப்பற்றியது

பெங்களூரு | Webdunia| Last Modified செவ்வாய், 4 ஜனவரி 2011 (19:27 IST)
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் மொத்தமுள்ள 30 மாவட்ட பஞ்சாயத்துக்களில், பா.ஜனதா 14, எதிர்கட்சிகளான காங்கிரஸ் 7 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. இன்னும் 5 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

அதேப்போன்று 176 தாலுகா பஞ்சாயத்துக்களில் பா.ஜனதா 20 இடங்களை கைப்பற்றி முன்னணியில் உள்ளது.காங்கிரஸ் 10 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், இன்று இரவுக்குள்ளாகவோ அல்லது நாளையோ முழு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :