ஓரினச்சேர்க்கை தீர்ப்பை ஆய்வு செய்த பின்னரே முடிவு- மொய்லி

Webdunia| Last Modified வியாழன், 2 ஜூலை 2009 (20:07 IST)
வயது வந்தோர் பரஸ்பர சம்மதத்துடன் ஓரினச் சேர்க்கை வைத்துக் கொள்வதை குற்றமாகக் கருத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் முழு நகலையும் அரசு பரிசீலிக்கும் என்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்வோம் என்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

பரஸ்பர சம்மதத்துடன் வைத்துக் கொள்ளும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதுவது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும் என்று முக்கியமான தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :