என்னை அச்சுறுத்த முயற்சி: ராம்தேவ்

புதுடெல்லி| Webdunia| Last Modified சனி, 4 ஜூன் 2011 (19:50 IST)
ஊழல் ஒழிப்பு மற்றும் கறுப்பு பணத்தை மீட்க அரசை வலியுறுத்தி டெல்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பாபா ராம்தேவ், தம்மை அச்சுறுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ராம் லீலா மைதானத்தில் திரண்ட தமது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில் இக்குற்றச்சாட்டைக் கூறிய அவர்,கறுப்பு பண பிரச்சனை தொடர்பாக கமிட்டி எதுவும் அமைப்பதைக் காட்டிலும், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுவதையே தாம் விரும்புவதாக கூறினார்.

வெளிநாட்டில் குவிந்து கிடக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் இந்த தேசத்தின் சொத்து என்றார்.
தமது இந்த போராட்டத்தின் மூலம் தான் நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த விரும்புவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ள குற்றச்சாட்டை குறிப்பிட்ட அவர், இந்துக்களும், இஸ்லாமியர்களுக்கும் இடையேயோ அல்லது சாதி அல்லது மத ரீதியாகவோ தாம் பிளவை ஏற்படுத்தவில்லை என்றார்.

உண்மைக்கான இந்த போராட்டத்தில் தாம் தாக்கப்பட்டாலும் தாம் பின்வாங்கப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :