என்னைத் தூக்கிலிட்டாலும் கவலையில்லை- சல்மான் குர்ஷித்

Webdunia|
பஸ்மந்தா முஸ்லீம்களின் உரிமையை நிலைநாட்டுவேன். தேர்தல் கமிஷன் என்னை தூக்கில் இட்டாலும் இவர்களின் உரிமையை பெற உறுதி செய்வேன் என மத்திய சட்டத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான சட்ட துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது மனைவி போட்டியிடும் ஃபரூக்காபாத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள 27 சதவீதத்தில் சிறுபான்மையினருக்கான உள் ஒதுக்கீடு 9 சதவீதமாக உயர்த்தப்படும் என கூறியுள்ளார்.
இந்த வாக்குறுதிக்காக தேர்தல் கமிஷன் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் என்னைத் தூக்கிலிட்டாலும் போராடுவேன் என்று கூறியது மேலும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :