இலவசங்கள் வேண்டுமா? வேண்டாமா? - விதிமுறைகளை வகுக்கும் தேர்தல் ஆணையம்

Webdunia|
FILE
தேர்தல் நடைபெறும் சமயங்களில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து இன்று தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி ஆலோசனை நடத்தியது.

உச்சநீதிமன்றம் மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளை நெறிப்படுத்த விதிமுறைகளை உருவாக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையம், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்ற இக்கூட்டம் இன்று டெல்லியில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்ட தேர்தல் ஆணையம், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் இலவச பொருட்கள் சார்ந்த வாக்குறுதிகள் பற்றி ஆலோசித்தது.


இதில் மேலும் படிக்கவும் :