தொடர்புடைய செய்திகள்
- 17 நிமிடங்கள் சிசிடிவி அணைப்பு? தபால் வாக்குகள் முன்கூட்டியே பிரிப்பு? தேர்தல் ஆணையத்தில் திடுக் புகார்...!
- சீல் வைக்கப்பட்ட EVM அறையில் 4 மணி நேரம் இருந்த மம்தா பானர்ஜி.. என்ன செய்தார்?
- மேற்குவங்கத்தில் 2ஆம் தேர்தல்.. வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் பயங்கர வன்முறை..!
- தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்..!
- நேற்றுடன் முடிந்துவிட்டதா அவகாசம்? வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நீட்டிப்பு..!
இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க விரும்பும் இந்தோனேஷியா.. பிரதமர் மோடி முன் ஒப்பந்தம்...
இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான உலகளாவிய அங்கீகாரமும் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனேஷியா, தனது தேர்தல் முறையை நவீனப்படுத்த இந்திய விவிபேட் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மாதிரியைப் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளது.
தற்போது இந்தோனேஷியாவில் ஒரே நாளில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 2029 பொதுத்தேர்தல் முதல் அங்கு இ-வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்த அந்நாடு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் ஜகார்த்தா பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே தேர்தல் மேலாண்மை மற்றும் பிரத்யேக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றுமதி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது இந்தோனேஷிய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்திய தேர்தல் முறையை நேரில் பார்வையிட்டு, அது மிகவும் ஊக்கமளிப்பதாகப் பாராட்டினர்.
இந்தியாவில் 2004 முதல் நாடு முழுவதும் இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்திய தொழில்நுட்ப உதவியைப் பெற்றுள்ளன. நமீபியா நாடு இந்திய விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வணிக ரீதியாக இறக்குமதி செய்து தனது தேசியத் தேர்தல்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
