ஆயுதப் போட்டி இந்தியா விரும்பவில்லை : பிரதமர்!

Webdunia| Last Modified சனி, 7 ஜூலை 2007 (16:19 IST)
எந்தவொரு நாட்டுடனும் அணு ஆயுதப் போட்டியில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் விஞ்ஞானிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்தியா அண்டை நாடுகளுடன் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்தியா நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், அண்டை நாடுகளுடன் நிலவும் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண இந்தியா விரும்புவதாக கூறினார்.

சர்வதேச அளவில் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலவும் சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி ஆயுதங்களை தயார்படுத்த வேண்டியிருப்பதாகக் கூறிய மன்மோகன் சிங், எந்தவொரு நாட்டுடனும் ஆயுத போட்டியில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை என்றும் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :