ஆப்ரிக்க வெட்டுக்கிளி இந்தியா, பாகிஸ்தானை தாக்கும் அபாயம்

locusts
Webdunia|
webdunia
கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து பல லட்சக்கணக்கில் வெட்டுக் கிளிகள் இந்தியப் பெருங்கடலைத் தாண்டி பாகிஸ்தானையும், இந்திய மேற்குப் பகுதிக்கும் குடியேறும் அபாயம் இருப்பதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெசர்ட் லோட்டஸ்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் தாவரங்களை கடித்து பெரும் நாசம் விளைவித்து வருகின்றன.

தற்பொழுது இந்தியாவின் மேற்குப் பகுதியிலும், பாகிஸ்தானிலும் நல்ல மழை பெய்துள்ளதால் ஈரமான இந்த வெப்பநிலை வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக இருப்பதால் அவைகள் பல லட்சக்கணக்கில் இந்தியப் பெருங்கடலைத் தாண்டி, இந்தியாவின் மேற்குப் பகுதி மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானையும், பாகிஸ்தானின் சோலிஸ்தான், தார்பார்கர் ஆகிய பாலைவனப் பகுதிகளுக்கும் குடியேறலாம் என்றும் இன்னும் இரண்டு நாட்களில் இந்த படையெடுப்பு நிகழும் என்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (Food and agriculture Organisation - (IFAO) கூறியுள்ளது.
இந்த வெட்டுக்கிளிகள் ஒரு நாளைக்கு 150 கி.மீ. தூரம் பயணம் செய்யக் கூடியது என்றும், நீண்ட நேரம் தரையில் இறங்காமலேயே பறந்து கொண்டிருக்கக் கூடிய திறன் பெற்றவை என்றும் ஐ.நா. அமைப்பின் வேளாண் நிபுணர் கீத் டிரஸ்ட் மேன் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் வேளாண் அமைப்புகள் விடுத்த எச்சரிக்கையை அடுத்து இந்திய, பாகிஸ்தான் அரசுகள் நிபுணர் குழுவினருடன் இந்த படையெடுப்பை சமாளிக்க அப்பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.(பி.டி.ஐ.)


இதில் மேலும் படிக்கவும் :