அன்னா ஹசாரே விரைவில் வீடு திரும்புகிறார்

புனே| Webdunia|
அன்னா ஹசாரே உடல் நலம் தேறி உள்ளதாகவும், அவர் வருகிற 8 ஆம் தேதியன்று வீடு திரும்புகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்ன ஹசாரே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு புனேவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அன்னா ஹசாரே உடல் நலம் தேறி உள்ளதாகவும், அவர் வருகிற 8 ஆம் தேதியன்று வீடு திரும்புவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஹசாரே மார்பு எக்ஸ்ரே மற்றும் இரத்த பரிசோதனைகள் நார்மலாக உள்ளது. அவர் இரவு நன்றாக ஓய்வு எடுப்பதால் அவரது உடல் நிலை தேறி வருகிறது. அவரை பார்ப்பதற்கு யாரையும் அனுமதிப்பது இல்லை.அவர் நன்கு குணமடைந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :