அக்டோபர் 2-ம் தேதி முதல் போராட்டம்: பாபா ராம்தேவ்

Webdunia|
காங்கிரஸ் கட்சி ஊழலில் புதிய மைல்கல்லையே எட்டிவிட்டது என்று கேலி செய்த பாபா ராம்தேவ் அக்டோபர் 2ஆம் தேதி முதல் போராட்டம் அறிவித்துள்ளார்.

குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டசபைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரம் மற்றும் அமைப்பை எதிர்த்து

வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு வரப்போகும் பொது தேர்தல் வரை போராட்டம் நடத்தப் போவதாகவும் என்னைக் குறிவைத்து தாக்கி வரும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலின் போது மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் ராம்தேவ் இன்று நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தின்போது கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :