தொடர்புடைய செய்திகள்
- ஒரே ஒரு மனிதனை வீழ்த்த, வாழ்நாள் எதிரிகளான இரு திராவிட கட்சிகளும் ஒன்று சேர்கின்றன... மாணிக்கம் தாகூர்
- திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தல மேல கத்தி!. விஜய் இதை யோசித்தாரா?...
- திமுக நிலைப்பாட்டை மீறி திருமாவளவன் தவெகவை ஆதரிப்பாரா?!.. ஒரு அலசல்....
- தமிழகத்தில் அதிமுக ஆட்சி.. பழனிச்சாமி முதல்வர்!.. தம்பிதுரை பேட்டி...
- ஆளுனரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி.. ஆட்சி அமைக்க உரிமை கோருகிறாரா?
ஒன்னு நீ.. இன்னொன்னு நான்.. நமக்குள்ள வேற யாரும் நடுவுல வந்திடக்கூடாது.. விஜய்யின் பழைய வீடியோ வைரல்...!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த 'தமிழக வெற்றிக் கழகம்' ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது.
பெரும்பான்மைக்கு இன்னும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் சூழலில், விஜய்யை தடுக்க பரம எதிரிகளான திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் அதிரவைக்கின்றன.
இந்த சூழலில், தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், திராவிட கட்சிகளின் திரைமறைவு அரசியலை விஜய் மிகத் துல்லியமாக சாடியுள்ளார்.
"நமக்குள்ள வேற யாரும் நடுவுல வந்திடக்கூடாது... வெளியே அடிச்சுக்குற மாதிரி இருந்தாலும் உள்ள நம்ம டீலிங் பக்காவா இருக்கணும்... விஜய்யால நம்ம பொழப்பே போச்சு... அதனால ஒருத்தன் தடுத்து நிறுத்தணும், இன்னொருத்தன் பழி போடணும்" என்று இரு கட்சிகளும் தங்களுக்குள் பேசிக்கொள்வது போல விஜய் கிண்டலாகவும் ஆவேசமாகவும் பேசியிருந்தார்.
அவர் அன்று கணித்தபடியே, இன்று தவெக-வின் ஆட்சி அமைக்கும் முயற்சியை தகர்க்க இரு திராவிட கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில் நிற்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
"மக்களின் உணர்வுகளை பற்றி இவர்களுக்கு கவலை இல்லை, அதிகாரமே குறிக்கோள்" என்ற விஜய்யின் விமர்சனம் தற்போது நிஜமாகி வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மக்களின் இறுதித் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக அமையும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.
Edited by Siva
அன்றே கணித்தார் விஜய் அண்ணா ... நீ மாஸ்ன ???????????? #TVKVijayHQ pic.twitter.com/rDd64027wX
— Darshini (@Darshini_Che) May 8, 2026
