1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Ashok
Last Updated : புதன், 21 அக்டோபர் 2015 (18:16 IST)

நானும் ரவுடிதான் - விமர்சனம்

பாண்டிச்சேரியில் இன்ஸ்பெக்டர் ராதிகா. இவருடைய மகனாக சின்ன சின்ன கட்டப் பஞ்சாயத்து செய்து மாணவர்களின் ஆதரவுடன் அப்பகுதியில் விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் என்பதை காட்டிக்கொள்கிறார்.


 

வழக்கம் போல தமிழ் சினிமாவில் கதநாயகியை பார்த்ததும் காதலிக்க ஆரம்பிக்கிறார் விஜய் சேதுபதி. நாயகியாக நயன்தாரா அந்த பகுதிக்கு வரும்போது தன்னை ரவுடியாக காட்டிக்கொண்டு ஹீரோயிஸம் செய்கிறார்.

நயன்தாராவிற்கு இரண்டு காதுகள் கேட்காது. ஆனால் பேசுவார். அது எப்படியென்றால் பேசுபவர்களின் வாய் உச்சரிப்பை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் பேசும் திறன் கொண்டவர்.

காது கேட்கும் திறனை எப்படி இழக்கிறார் என்பதை ப்ளாஷ் பேக்கில் காண்பிக்கின்றனர். நயன்தாராவின் அப்பா போலீஸ் அதிகாரியாக பாண்டிச்சேரியில் பணியாற்றும்போது அப்பகுதி பெரிய ரவுடியாக இருக்கும் பார்த்திபனை எதிர்க்கிறார். இதனால், அவரை தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறார். ஒருநாள் நயன்தாராவிடம் வெடிகுண்டு பார்சலை கொடுத்து அனுப்புகிறார். இதனால் வெடி குண்டு வெடிக்கும் போது அம்மா இறந்துவிடுகிறார். அப்போது நயன்தாரா காது கேட்கும் திறனை இழந்து விடுகிறார். பின்னர் அவருடைய அப்பாவையும் பார்த்திபன் கொலை செய்துவிடுகிறார்.

இதனால் பார்த்திபனை கொல்ல சரியான ரவுடியை தேடுகிறார் நயந்தாரா. இந்நேரத்தில் நயன்தாராவிடம் காதல் வசப்படுகிறார் டம்மி ரவுடியான விஜய் சேதுபதி. இவரிடம் தன்னுடைய கதையை சொல்லி தன்னுடைய அப்பாவை கொலை செய்த பார்த்திபனை நீ கொன்றால் உன்னை காதலிக்கிறேன் என்று நயன்தாரா கூறுகிறார்.

அப்போது, விஜய்சேதுபதி யோசிக்க நயன்தாரா காதலிக்க மறுக்கிறார். பின்னர் சில ரவுடிஸ்ங்களை அவள் முன் செய்து காண்பித்து நானும் ரவுடிதான் என்பதை காட்டிக்கொள்கிறார் விஜய் சேதுபதி. கடைசியாக பார்த்திபனை கொலை செய்யும் பொறுப்பை நயன்தாரா அவரிடம் ஒப்படைக்கிறார்.

டம்மி ரவுடியாக இருந்த விஜய் சேதுபதி எப்படி பார்த்திபனை கொலை செய்வது என்பது புரியாமல் ராயபுரம் ரவுடி நான் கடவுள் ராஜேந்திரன் உதவியை நாடுகிறார். அவர் விஜய் சேதுபதிக்கு பயிற்சி அளிக்கிறார். ராஜேந்திரனிடம்.............
                                                                                                              மேலும் படிக்க அடுத்தப்பக்கம் பார்க்க...........

பயிற்சி எடுக்கும் போது நடக்கும் காமெடி கலாட்டா படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. இறுதியில் ரவுடி பார்த்திபனை கொன்று நயன்தாராவின் விருப்பத்தை நிறைவேற்றினாரா? இல்லயா? என்பதே மீதி கதையாகும்.
                                    

 

























இந்த படத்தில் நயன்தாரா தனது சொந்த குரலில் பேசி தன்னுடைய குரலுக்கு ஏற்றார் போல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காது கேட்காத பெண்ணாக அவர் நடிப்பும் அழகும் ரசிக்கும் படி இருக்கிறது. ஆனால் இவருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி கொஞ்சம் கிளாமராக வருவது இவருக்கு செட் ஆகவில்லை. என்றாலும் ஸ்டைலாக பேசி நடித்து இருக்கிறார். சில இடங்களில் துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காமெடிக்கு ஆர்.ஜே பாலாஜி, நான் கடவுள் ராஜேந்திரன் அவர்களுடைய ஸ்டைலில் கச்சிதமாக நடித்துள்ளனர்.

"போடா போடி" படம் தோல்விக்கு பிறகு விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கி இருப்பதால் கொஞ்சம் கவனமாக தன்னுடைய வேலையை செய்து இருக்கிறார். சில இடங்களில் காமெடியுடன் வசனங்கள் இருப்பதால் ரசிக்கும் படி இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் இந்த படத்தில் விக்னேஸ் சிவன் "பாஸ்" ஆகிவிட்டார் என்று கூறலாம்.
 
இந்த படத்தின் காட்சி அமைப்பில் நயன்தாராவை முந்தைய படங்களை விட மிகவும் அழகாக குறைந்த வயதுடைய நயனாக ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸின் காட்டியிருக்கிறார். படத்தின் காட்சி பதிவு முந்தைய படத்திலிருந்து வித்தியாசத்துடன் அழகான கேமரா கோணங்களில் ஒளிப்பதிவு செய்து ரசிக்கும் படியாக படத்தை காட்டியிருக்கிறார்.

இந்த படத்தின் பின்னணி இசையை அனிருத் வழக்கும்போல் தன்னுடைய ஸ்டைலில் தெறிக்கவிட்டுள்ளார். சில காதல் பாடல்கள் ரசிக்கும் படி இருக்கிறது. படத்தின் வசனத்தை விட பின்னனி இசைதான் ரசிகர்களின் காதுக்கு கேட்கிறது.

நானும் ரவுடிதான் என்ற படத்தின் தலைப்பிற்கு ஏற்றார்போல் கதையும் கலகல ரவுடியாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் "நானும் ரவுடிதான்" விஜய் சேதுபதியின் கலகல ரவுடி தான்..