செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Ashok
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (20:03 IST)

கத்துக்குட்டி - திரைவிமர்சனம்

நெல் விளைச்சளுக்கு பெயர்போன தஞ்சை நகரில், இன்று விலை நிலங்களை எல்லாம் அடியோடு அழிக்கும் மீத்தேன் வாயு திட்டம் உள்பட பல திட்டங்களை நிறைவேற்ற அரசியில் வாதிகளும் அரசு அதிகரிகளும் முனைப்புடன் முயற்சி செய்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு தடைவிதித்து விலை நிலங்களை அழிக்கும் பலதிட்டங்களை விரட்டியடிக்க வருகிறான். கத்துக்குட்டி!


 


 
இந்த படத்தின் ஒவ்வொரு வசனங்களும். சமகால அரசியலையும், சமூக மாற்றங்களையும், விவசாயிகளின் இன்றைய நிலை, கிராமங்களின் இன்றைய சூழாலை நேரடியாக வெளிப்படுத்திகிறார் அறிமுக இயக்குனர் சரவணன்.
 
நரேன்தான் ஹீரோவாக கத்துக்குட்டியில் தவள்கிறார். நேர்மையான அரசியல்வாதியின் மகனான நரேன் அவரது வேலை நேரம் வெட்டி வம்பாகவும், ஓய்வு நேரம்… குடியாகவும் இருக்கிறது

குடியிருக்கும் தெருவில் ஆரம்பித்து பக்கத்து கிராமம் வரைக்கும் இவரது எதிரிகளின் பட்டலாம் நீள்கிறது. இவரது பெஸ்ட் பிரண்டாக வழக்கமான சூரியாக நடிக்கிறார்.
 
வேளாண்மையில் டிகிரி முடித்த நடித்த நரேன் தனது ஊரில் விவசாயம் செய்கிறார். சில நேரம் ஊரில் வெட்டி வம்புக்கு போகிறார்.  அதே ஊரில் வசிக்கும் நடிகர் சம்பத் மற்றும் அவருடைய மகள் சிருஷ்டி டாங்கே இருவரும் விவசாய நிலங்களையும், விவசாய மக்களையும் காக்க வேண்டும் என்ற நோக்கில் வாழந்து வருகிறார்கள். ஊரில் டவர் அமைக்க வேண்டும் என்று கூறி இவரது வீட்டிற்கு நரேன் செல்கிறார். அப்போது பறவைகள் இனம் அழிந்துவிடும் என்று நரேனிடம் தெரிவிக்கிறார்.

பின்னர் இருவரும் காதலிக்கின்றனர். சில இடங்களில் இருவருக்கும் இடையில் மோதலும் நடக்கிறது. மீத்தேன் வாயுவை மண்ணிலிருந்து எப்படி எடுக்கிறார்கள் என்பதை இரண்டு நிமிஷத்திற்கும் குறைவான விளக்கப்படம் மூலமாக அவர் காட்டுகிற போது விவசாகளின் ரத்தம் கொதிக்கிறது. ‘உலக நாடுகளில் எல்லாம் தடை செய்யப்பட்ட அந்த முயற்சியை இங்கே ஏண்டா அனுமதிக்கிறீங்க?’ என்று இவர் கேட்கிற கேள்விக்கு கட்டயம் அரசியில் வாதிகளும், அதிகாரிகளும் பதில் அளிக்கு வேண்டிய சூழ்நிலை உருவாகிறது
 
தனது ஊரில் ரியல் எஸ்டேட் விளம்பர ஷுட்டிங்குக்காக வந்து, நரேனிடம் மாட்டிக் கொள்ளும் நடிகை தேவிப்பிரியாவிடம், நரேன் கேட்கிற கேள்விகள் ஒவ்வொன்றும் ‘எப்படியவது விலைநிலங்களை விற்விட வேண்டும் என்பதற்காக, எல்ல பொய்யும் சொல்லி..
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

எவன் தலையிலாவது நிலத்தை கட்டிடணும்’ என்று உணர்வுபூர்வமாக நரேன் சொல்லும் போது நடிகர் நடிகைகளுக்கு கட்டயம் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தும் மேலும்,. “உங்க தொழிலுக்குள்ள நாங்க தலையிடுறோமா? ஏண்டி விவசாயியோட தொழில்ல வந்து தலையிடுறீங்க” என்று அவர் கேட்கிற கேள்விக்கு யாராலும் பதில் சொல்லமுடியாது


 

 
ஒருநாள், காதலியின் அப்பா சம்பத் தன்னுடைய நிலத்திற்கு அருகில் மீத்தேன் திட்டத்திற்கு ஆய்வு செய்ய அதிகாரிகள் வரும்போது தடுக்கிறார். அப்போது உடனே அதிகாரிகள் அவரை மனம் புண்டும்படி பேசி தள்ளிவிடுகிறார்கள். இதனால் மனம் பொறுக்கமுடியாமல் தன்னுடைய மரணத்தை பட்டினச் சாவாக அவர் பதிவு செய்யும் படி மருந்து குடித்து தற்கொலை செய்கிறார்.
 
ஒரு விவசாயியின் பட்டினிச் சாவை, தனது மகளின் காதலுடன் தொடர்பு படுத்தி அரசு  அதிகாரிகளும், காவல்துறையினரும் எப்படி கொச்சைப்படுத்துகிறார்கள் என்பதையும் நடுவில் புகுத்தி விறுவிறுப்பான திரைக்கதையாலும், சில இடங்களில் நகைச்சுவை உணர்வுடன் முதல் பாதி கதை முடிக்கிறார் இயக்குனர்.

நரேனின் அப்பா ஜெயராஜ், அரசியல் கட்சி ஒன்றில் அப்பகுதியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கிறார். நாற்பது ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் இவருக்கு எம்எல்ஏ சீட்டு கொடுக்காமல் தலைமை இருக்கிறது. இந்நிலையில் அந்த ஊருக்கு தேர்தல் வருகிறது. இதில் நிற்பதற்காக கட்சி தலைமையை பார்க்க சென்னை செல்கிறார் ஜெயராஜ்.
 
அப்பொழுது கட்சி தலைமை இந்த முறை இளைஞருக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாக தலைமை தெரிவிக்கிறது. இதனால் மகனான நரேனுக்கு திடீரென தேர்தலில் நிற்கிற வாய்ப்பு வர, இந்த விஷயம் கேள்வி பட்ட எதிர்க்கட்சியும் அந்த ஊரில் ஒரு படித்த இளைஞரை தேர்தலில் நிர்த்திகிறார்கள். 
மற்ற தமிழ்சினிமா போன்று கடும் போட்டி? யாருக்கு வெற்றி என்பது படத்தின் க்ளைமாக்ஸ்...
 
படத்தில் இரு முக்கியமான கேரக்டர்கள். பாரதிராஜா தம்பி ஜெயராஜும், தயாரிப்பாளர் ஞானவேலும்தான் அவர்கள்! ஒரு அரசியல்வாதி தகப்பனின் தவிப்பையும் பெருமையையும், சில இடங்களில் நகைச்சுவை உணர்வுடன் இவரது செயல்பாடுகள் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயராஜ். இவரது எதிர்கட்சியின் மாவட்டமாக வரும் ஞானவேல் கம்பீரமான கரை வேட்டியாகவும், யாரும் இல்லாத நேரத்தில் கடைந்தெடுத்த தர லோக்கலுமாக டபுள் முகம் காட்டுகிறார். 
 
பின்னர் தன்னுடைய கட்சிகுள்ளயே ஒரு எதிரி வளம் வருகிறான். இந்நிலையில் இவனின் ஜாதகத்தை சாமியாரிடம் காட்டி, அவனுக்கு அரசியலில் எதிர்காலமே இல்லை என்று சாமியார் சொல்லும்போது ஞானவேல் ஒரு குத்தாட்டம் போடுவது தர லோக்கல்....படத்தின் க்ளைமாக்ஸ்ல் ஞானவேலை நல்லவராக காட்டி இவரது வசனத்துடன் படத்தை முடிக்கிறார் இயக்குனர் சரவணன்.
 
இந்த படத்தில் அருள்தேவின் இசை அமைதியான, கிராமத்து சூழாலில் நேர்த்தியான பொருத்தமான பாடல்கள். பின்னணி இசையும் சில இடங்களில் பொருத்தம். சந்தோஷ் ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் கிராமத்தை ரியலாக காட்டுகிறார். சில இரவுக்காட்சிகளில் கதநாயகி சிருஷ்டியின் அழகு பளிச்...
 
இன்றைய தமிழ் சினிமாவில் கருத்துப் பிரசாரத்தோடு கமர்ஷியல் மசாலாவாக வந்துள்ளது கத்துக்குட்டி!!