தொடர்புடைய செய்திகள்
- நம்ம ரூட் தனி ரூட்!.. சைட்ல பாத்து பழக்கமே இல்ல!.. தெறிக்கவிட்ட தனுஷ்!..
- 5 நிமிஷம் லேட்டா போனா படமே புரியாது!.. கர இயக்குனர் விக்னேஷ் ராஜா சொல்றத கேளுங்க!..
- கர எனக்கு முக்கியமான படம்!.. இயக்குனர் விக்னேஷ் ராஜா பேட்டி!...
- கர பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!.. வாயா என் கர சாமி பாடல் வீடியோ...
- 180 கோடி சம்பளம்!.. 90 கோடி அட்வான்ஸ்!.. கோலிவுட்டில் லக்கிமேன் தனுஷ்தான்!...
கர படம் எப்படி இருக்கு?. ரசிகர்கள் சொல்வது என்ன?.. வாங்க பார்ப்போம்!..
கடந்த சில நாட்களாகவே போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா ஊடகங்களில் கர படம் பற்றி கொடுத்த பேட்டிகள்தான் தொடர்ந்து வைரலாகி வந்தது. போர்த்தொழில் படம் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா தற்போது தனுஷை வைத்து கர படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு போலீஸ் அதிகாரியாகவும், ஜெயராம் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இன்று காலை தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. தற்போது முதல் காட்சி முடிந்து விட்டதால் படம் பார்த்த பலரும் படத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..
படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், ஒரு நல்ல தரமான வில்லேஜ் திரில்லர் படமாக கர உருவாகியிருப்பதாகவும், தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாகவும், விக்னேஷ் ராஜா அசத்தலாக இயக்கியிருப்பதாகவும் ரசிகர்கள் சமூகவலை தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக, ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பிளஸ்ஸாக இருப்பதாகவும் பலரும் கூறுகிறார்கள்.
படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்ஷன் என எல்லாமே சிறப்பாக அமைந்திருப்பதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள். படம் நன்றாக இருப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருவதால் கண்டிப்பாக கர படத்திற்கு வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் முதல் 15 நிமிடக் காட்சி, படத்தின் இடைவேளை காட்சி, படத்தின் இறுதிக்காட்சி ஆகியவை கூஸ்பம்சாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்..
இந்த படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு போலீஸ் அதிகாரியாகவும், ஜெயராம் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் இன்று காலை தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியானது. தற்போது முதல் காட்சி முடிந்து விட்டதால் படம் பார்த்த பலரும் படத்தைப் பற்றிய தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..
படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், ஒரு நல்ல தரமான வில்லேஜ் திரில்லர் படமாக கர உருவாகியிருப்பதாகவும், தனுஷ் சிறப்பாக நடித்திருப்பதாகவும், விக்னேஷ் ராஜா அசத்தலாக இயக்கியிருப்பதாகவும் ரசிகர்கள் சமூகவலை தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக, ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பிளஸ்ஸாக இருப்பதாகவும் பலரும் கூறுகிறார்கள்.
படத்தின் முதல் 15 நிமிடக் காட்சி, படத்தின் இடைவேளை காட்சி, படத்தின் இறுதிக்காட்சி ஆகியவை கூஸ்பம்சாக இருப்பதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்..
அடுத்த கட்டுரையில்