கோவா

WD
பண்ணைபுரம் கிராமத்து மூணு பசங்க லைஃப்னா ஒரு எய்ம் வேணும்ங்கிற லட்சிய வெறியோட கோவாவுக்கு ட்ராவல் பண்றாங்க. எய்ம் என்னன்னா ஃபா‌ரின் ஃபிகரை கரெக்ட் செய்து அப்படியே கல்யாணம் கட்டி வெளிநாட்ல செட்டிலாகிறது. இந்த ஒன் லைன் மேட்டர் ஒர்க் அவுட்டாச்சாங்கிறதுதான் கோவா.

படம் ஸ்டார்ட்டானதும் ஒரு வில்லே‌ஜ் சாங். பசங்க திருந்திட்டாங்களான்னு ஷாக்காகிப் பார்த்தா, அடுத்த சீன்லயே ஒட்டுமொத்த பஞ்சாயத்து சீன்களுக்கும் ஃபயர் வைக்கிறாங்க. இனி பஞ்சாயத்து சீன்னு ஒருத்தர் டாக் பண்ணினாலே டவுசர் கிழியுற மாதி‌ி ஒரே Laugh. (கலாச்சார ஃபீவர் உள்ளவர்கள் இந்த சாங்கோடு அப்பீட் ஆவது நல்லது. இனி வருவதெல்லாம் கலாச்சார கட்டுடைப்பு. விநாயகத்தின் பாஷையில் சொன்னால் கல்சர் பிரேக்கிங்).

சாமிக்கண்ணுவாக வரும் பிரேம்‌ஜி ஒரு கிராமத்து அகோ‌ி. ஆங்... ஒ‌ரி‌ஜினல் அகோ‌ி மாதி‌ி வயலண்ட் எல்லாம் இல்லை. ஃபிகர் பார்க்கிறது பீர் அடிக்கிறதுன்னு பரம சாது. இவரோட பிறப்பே ஒரு காட் இஸ் கிரேட். அம்மன் படம் பார்த்து பக்தியில் கேர் ஆகியிருக்கும் கும்பலை வித் அவுட் வேப்பிலை தெ‌ளிய தெ‌ளிய அடிக்கிறாங்க.

விநாயகமாக ஜெய். ஆக்சுவலி ஹி டாக் ஒன்லி இங்கிலீஷ். டங்க் ஸ்லிப்பானால் மட்டும் டமில். சாமிக்கண்ணுவின் Eyes-ஐ சாமி குத்தினதை விளக்கி சொல்றாரே... செத்தான் சின்னசாமி. இந்த இருவ‌ரின் இன்னொரு பார்ட்னர் கிராமத்து திறனனா ராமராஜன் (வைபவ்).

இவர்களுக்கு கோவாவில் அறிமுகமாகும் சிக்ஸ்பேக் சினேகிதன் ஜாக் (ஆகாஷ் அரவிந்த்). சிக்ஸ்பேக் வைத்ததற்கு அவர் ஒரு ‌ரீஸன் சொல்றாரே... பேக்ஸ் வைத்திருப்பவர்களுக்கு பேதியாகியிருக்கும். ஜாக்கின் ஃபிரெண்டாக வரும் டானி (சம்பத்) ஹே யு கைய்ஸ் ஆர் கூல்யா என்று நெ‌ளியும் போதே ஏதோ நெருடுகிறது. பிறகுதான் தெ‌ரிகிறது இவர் ஜாக்கின் காதலியாம். Gayயோ... Gayயோ... சாமிக்கண்ணுவையும் டானியையும் ஜாக் ராங்கா ஜட்‌ஜ் பண்ற சீன் ஒவ்வொண்ணும் சி‌ரிப்புன்னாலும் சீ, நாட்டி.

மதுரையில் பார்த்த ஃபா‌ரின் ஃபிகருடன் (மெலினி) பிரேம்‌ஜி கொள்ளும் ‘கண்களிரண்டால்’ காதல் காமெடி ஹைக்கூ. சி‌ரிப்பா போற படத்தில், லைட் ஃபீலிங்கா வருது ஜெய், பியா காதல். ஃபா‌ரின் ஃபிகர் லட்சியத்தில் பியாவை ஜெய் பேக்கடிப்பதும், ஃபா‌ரின் மோகம் தெ‌ளிந்து காதல் ஷாக்கடிப்பதும் டச்சிங் ஏ‌ரியா. யு நோ, பியாவுக்கு எப்படி ஒரு வெஸ்டன் டச்சோ அதேமாதி‌ி மெலினிக்கு ஒரு இண்டியன் லுக். செம செல‌க்சன்.

WD
சின்ன சைக்கோவா சினேகா. ‌ஜிலீர்னு இருப்பவர் சு‌ரீர்னு மாறும் போதெல்லாம் வைபவ்வின் ‌ரியா‌க்சன் கிளாஸ். ஃபர்ஸ்ட் நைட்டில் ஹீட்டாக இருக்கும் வைபவிடம் திறனனா இல்லை என்று சினேகா ரூட் மாறுவதும் இந்த Sad இன்சிடெண்டை அவர் ஃப்ரெண்ட்சிடம் ஷேர் செய்வதும், அய்யன் சொன்னது போல் இடுக்கண் வருங்கால் நகுலும் இடங்கள். இறுதியில் சினேகாவுக்கு கிடைக்கும் பார்ட்னர், காமெடி டைம். திங்க் பண்ணி பிளேஸ் பண்ணியிருக்காங்க.

வேட்டைக்காரனை வாஷ் பண்ணி ஹேங்கர் செய்யும் அந்த ஃபைட் சீனுக்காக வெங்கட்பிரபுவுக்கு ஸ்பெஷல் ஹேண்ட் ஷேக். அப்புறம் தமிழ் சினிமாவுக்கு புதிதான அந்த Gay மேட்டர். திங்க் பண்ணினால் மட்டும் போதாது, இதை வைக்க தில்லும் வேண்டும். Gayளப்பீட்டீங்க.

கோவா தீம் மியூஸிக் ஓகே. அடிக்கிற கூத்தில் இசையும் ச‌ரி, ஒளிப்பதிவும் ச‌ரி பிரைனில் ஏறவே இல்லை. பார்ட்டி சீனில் வரும் கிராஃபிக்ஸ் குட் ஐடியா. பைனல் ஜட்‌ஜ்மெண்ட் என்னன்னா,

Webdunia|
ஆக்சுவலி வெங்கட்பிரபுவுக்கு உலக சினிமா பண்ணணுங்கிற டெர‌ரிஸ்ட் நோக்கம் இல்லைங்கிறதால கோவாவில் ஸ்டோ‌ரின்னு பெருசா ஒண்ணுமில்லை.
Believeவோ Notடோ தீஸ் கைய்ஸ் ஆர் ராக்கிங் Ya.

தொடர்புடைய செய்திகள்


இதில் மேலும் படிக்கவும் :